இந்திய, பாகிஸ்தான் போரில் தலையிடும் ட்ரம்ப்

பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “நான் இரு தரப்புடனும் நன்றாகப் பழகுகிறேன். இரண்டு நாடுகளையும் நான் நன்கு அறிவேன். அவர்கள் பிரச்சினைகளை சரிசெய்துகொள்வதை, தாக்குதலை நிறுத்திக்கொள்வதை நான் பார்க்க விரும்புகிறேன்.” – என்று குறிப்பிட்டார்.
அவர்கள் பழிக்குப்பழி தாக்குதல்களை நடத்திவிட்டார்கள். எனவே அவர்கள் இப்போது நிறுத்த முடியும் என்று நம்புகிறேன். இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்குவதை நிறுத்திவிட்டு அமைதிக்காக பாடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தேவைப்பட்டால் தலையிட்டு உதவத் தயாராக இருக்கிறேன்.” – என ஜனாதிபதி ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை, பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை என்றும், பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால் மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.