அமெரிக்காவில் டிரம்ப் ஆட்டம் ஆரம்பம் ; சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக, குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன் மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டார்.
‘சட்ட விரோத அகதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்’ என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களுக்கு எதிரான நடவடிக்கையை அதிகாரிகள் துவக்கி உள்ளனர். 3 நாட்களில் மட்டும் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு வந்த 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இதுவரை சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோர் ராணுவ விமானத்தைப் பயன்படுத்தி நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.