
கனடா அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க ட்ரம்ப் தடை
கனடா அரசாங்கத்தின் 6.4 பில்லியன் டொலர் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.
அமெரிக்கா இதுவரை வழங்கிய உதவிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வரை பாலத்தைத் திறக்க அனுமதிக்கப் போவதில்லை என அவர் எச்சரித்துள்ளார். பாலத்தில் பாதியளவு உரிமையை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என கோரியுள்ள ட்ரம்ப், கனடா மற்றும் சீனாவுக்கு இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தையும் கடுமையாகச் சாடியுள்ளார்.
2026-ஆம் ஆண்டின் முற்பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருந்த இந்தப் பாலம், ட்ரம்ப்பின் இந்தத் திடீர் நிபந்தனைகளால் தற்போது இராஜதந்திர சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
CATEGORIES உலகம்
