
விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் பயணிகள் – டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி நடிவடிக்கை
விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகங்களைச் சரிபார்க்க டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது.
புதிய சட்டம் அமலுக்கு வந்தால், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளைப் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டங்களின் கீழ், தொடர்புடைய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விசா இல்லாமல் 90 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்க முடியாது. அதற்காக அவர்கள் ஒரு “மின்னணு பயண அனுமதிச் சீட்டை” நிரப்ப வேண்டியிருந்தது.
ஆனால் முன்மொழியப்பட்ட விதிகளின்படி, கேள்விக்குரிய பயணிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை மற்றும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
