பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள்

பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள்

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேர் உள்ளடங்களாக 32 பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி வந்த நிஹால் தல்துவ, மொனராகலை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஊழியர் சபையின் பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றி வரும் ஜே.ஆர். டயஸ், அந்தப் பதவிக்கு மேலதிகமாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு மேலதிகமாக, இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஐந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share This