சசெக்ஸ் மற்றும் சர்ரே இடையேயான ரயில் பாதை மீண்டும் வழமைக்கு

சசெக்ஸ் மற்றும் சர்ரே இடையேயான ரயில் பாதை மீண்டும் வழமைக்கு

இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸ் (West Sussex) மற்றும் சர்ரே (Surrey) இடையேயான ரயில் பாதை, இரண்டு வாரங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஓக்லி (Ockley) அருகே ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து, ஹார்ஷாம் (Horsham) மற்றும் டோர்கிங் (Dorking) இடையேயான சேவை கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது.

தண்டவாளங்களின் அடிப்பகுதி இடிந்து வீழ்ந்ததால் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி ரயில் சேவையைத் தொடர முடியவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் Network ரயில் பொறியாளர்களின் பெரும் முயற்சிகளுக்கு மத்தியில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கமான ரயில் சேவைகள் மீண்டும் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )