
லண்டன் – பிரான்ஸ் இடையிலான ரயில் சேவையில் பாதிப்பு
ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸை இணைக்கும் சேனல் சுரங்கப் பாதையானது நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு முதல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் விடுமுறைக்காக பிரித்தானியா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யூரோஸ்டார் ரயில் சேவையில் இந்தப் பயணிகள் அனைவரும் பிரித்தானிய வந்துள்ளனர். மின் பாதிப்பு காரணமாக தற்போது ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுரங்கப்பாதையின் மேல்நிலை அமைப்பில் ஏற்பட்ட மின் தடையே இந்தப் சிக்கலுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டன் மற்றும் பாரிஸ் இடையேயான அனைத்து யூரோஸ்டார் ரயில் சேவைகளும், பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் போன்ற பிற முக்கிய இடங்களுக்கான ரயில் சேவைகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
