
மண்சரிவு காரணமாக பசறை – பதுளை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பசறை – பதுளை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பசறை – பதுளை வீதியின் 6ஆம் கட்டை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் அப்பகுதில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
அத்துடன் பசறை மற்றும் லுணுகலை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பல பகுதிகளில் தற்போது கடும் பனிமூட்டமும் நிலவுகிறது.
இந்நிலையில் வாகனச் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
