நுவரெலியாவில் காற்றுடன் கூடிய மழையினால் போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியாவில் காற்றுடன் கூடிய மழையினால் போக்குவரத்து பாதிப்பு

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

நேற்று (10) இரவு வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையில் நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்த்துள்ளது.

இதனால் ஒருவழி போக்குவரத்து இடம்பெற்று வருகிறது. அதேபோல நோட்டன், மஸ்கெலியா பிரதான வீதியின் இரண்டாம் கட்டைப்பகுதியிலும் பாரிய மரமொன்று வீதியில் வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.

கடும் காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவி வருகின்றமையினால் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதுடன், வீதிகள் வழுக்கும் தன்மை காரணமாக சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

CATEGORIES
TAGS
Share This