சுற்றுலாப் பயணிகளின் வருகை 11.7 வீதத்தால் அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் $768.2 மில்லியன் வருவாயை இலங்கை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாயான $687.5 மில்லியனுடன் ஒப்பிடும்போது இது 11.7 சதவீதம் அதிகரிப்பாகும்.
2024 ஆம் ஆண்டில் $3.17 பில்லியன் வருவாயை இலங்கை சுற்றுலாத்துறை ஊடாக பெற்றது. அது 2023ஆம் ஆண்டில் பெற்றப்பட்ட வருவாயான $2.07 பில்லியனுடன் ஒப்பிடும்போது 53.2 சதவீதம் அதிகரிப்பாகும்.
இந்த ஆண்டின் முதல் 72 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15.3 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் 13 வரை இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 590,300 அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டை விட 38.1 சதவீதம் சுற்றுலாப் பயணிகளின் அதிகப்பையே இது காட்டுகிறது. இந்த ஆண்டு அரசாங்கம் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காக கொண்டு செயல்படுகிறது.
2018 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை உச்சத்தில் இருந்தபோது சுற்றுலாத் துறை இலங்கையின் பொருளாதாரத்தில் 5 சதவீதத்தைக் கொண்டிருந்தது. 2019 இல் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலைத் தாக்குதல் மற்றும் 2020 இல் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டில் அரசாங்கம் நிர்ணயித்துள்ள 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் ஈர்க்கும் திட்டங்களின் ஊடாக 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக வருமென எதிர்பார்க்கப்படுகிறது.