ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளது

ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளது

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் மட்டும் 200,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை வந்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களின் இறுதிக்குள் நாட்டிற்கு வருகை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,368,388 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Share This