இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும்

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (03) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஏனையப் பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 10 மி.மீ வரை மழை பெய்யக்கூடும்.
தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இரண்டு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, அந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தில் உள்ள பதுளை, கந்தகட்டிய, பசறை, ஹாலி எல, சொரணத்தொட்ட, ஹப்புத்தளை, மீகஹகிவுல மற்றும் ஊவா பரணகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும், மண்சரிவுக்கான அறிகுறிகளைக் கண்டவுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.