ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையின் இன்று திங்கட்கிழமை சற்று வலுவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 35 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை 303 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.