புகையிலை நிறுவனத்தின் இலாபம் அதிகரிப்பு
புகையிலை நிறுவனத்தின் இலாபம் சுமார் 400 வீதம் அதிகரித்துள்ளதாக அதன் நிர்வாக பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார்.
முறையற்ற வரி நிர்ணயம் காரணமாக கடந்த 5 வருடங்களில் நாடு சுமார் 100 பில்லியன் ரூபா கலால் வருவாயை இழந்துள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த வரித் தொகையை நிர்ணயிப்பதன் மூலம் சிகரெட் விற்பனை சுமார் 50 வீதம் குறைந்திருந்தாலும் கூட புகையிலை நிறுவனத்தின் இலாபம் அதிகரித்துள்ளது.