பேருந்து மற்றும் முச்சக்கரவண்டிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய காலஅவகாசம்

பேருந்து மற்றும் முச்சக்கரவண்டிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய காலஅவகாசம்

பேருந்து மற்றும் முச்சக்கரவண்டிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்து பாகங்கள் தொடர்பான சட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவசரப்பட்டு கொண்டு வரவில்லை என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், புதிய அரசாங்கம் வந்ததும் பொலிஸாரும் நல்லெண்ணத்துடன் சட்டத்தை அமுல்படுத்த சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் துணைக்கருவிகளுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் என்றும், பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு சட்ட முறைமைகளுக்கு இணங்க கால அவகாசம் வழங்குமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

Share This