துசித ஹல்லொலுவவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

துசித ஹல்லொலுவவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13.06.25) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரசாங்க சொத்துக்களை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது இன்னொரு வழக்கு நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This