சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 03 சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாமின் அதிகாரிகள் குழுவொன்று கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமதியாவெல பகுதியில் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, நடத்தப்பட்ட 03 சுற்றிவளைப்புகளில் 03 துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் 35 மற்றும் 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் அட்டாலிவெவ மற்றும் உவமவெலகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொஸ்லந்த பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.