அல்பேனியா-வடக்கு மாசிடோனியா எல்லையை கடக்க முயன்ற மூன்று இலங்கையர்கள் கைது

அல்பேனியா-வடக்கு மாசிடோனியா எல்லையை கடக்க முயன்ற மூன்று இலங்கையர்கள் கைது

இத்தாலி குடியிருப்பு அனுமதிகளுடன் அல்பேனியா-வடக்கு மாசிடோனியா எல்லையை கடக்க முயன்ற மூன்று (03) இலங்கையர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய போலி ஆவணங்களுடன் எல்லையை கடக்க முயன்ற பின்னர் மூன்று இலங்கை குடிமக்களும் கோர்சாவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரும் இத்தாலியை தங்கள் இலக்காகக் கொண்டிருந்ததாகவும், அதே நேரத்தில் போலியானதாக சந்தேகிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் பொருள் ஆதாரங்களாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

57, 51 மற்றும் 36 வயதான மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கடவுச்சீட்டு அல்லது விசா மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This