இந்தியாவில் சிக்கிய மூன்று இலங்கை குற்றவாளிகள்

இந்தியாவில் சிக்கிய மூன்று இலங்கை குற்றவாளிகள்

குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய ஊடகங்கள் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், மூன்று இலங்கையர்களும் பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளி (Devanahalli) அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மூன்று இலங்கையர்களும் பல மாதங்களாக நகரில் பதுங்கி இருந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

29, 31 மற்றும் 41 வயதுடைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் டோண்ட்ரா, ரத்மலானா மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூவரும் 2024 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தின் ஊடாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாகவும், பின்னர் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சிறிது காலம் தங்கியிருந்து பெங்களூருவுக்குச் சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களில் எவருக்கும் கடவுச்சீட்டு உள்ளிட்ட செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருபவர் என்றும் மற்றொருவர் இலங்கையில் கொலை மற்றும் பிற குற்றங்கள் குறித்து சந்தேகிக்கப்படுபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர இலங்கை உயர் ஸ்தானிகராலயம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.

Share This