தலதா யாத்திரைக்குச் சென்ற மூவர் உயிரிழப்பு

தலதா யாத்திரைக்குச் சென்ற மூவர் உயிரிழப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள கௌதம புத்தரின் புனிதப் பல் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தச் சென்றவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று, கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில், 69 வயதுடைய ஒரு ஆணும், 74 மற்றும் 80 வயதுடைய இரண்டு பெண்களும் அடங்குவதாக மருத்துவர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் பிளியந்தல, கலகெதர மற்றும் கல்கமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
CATEGORIES
TAGS
Share This