நீரில் மூழ்கி மூவர் மாயம் – கரையொதுங்கிய சிறுவனின் சடலம்
அம்பாறை, திருக்கோவில் சங்கமன் கந்த கடலில் நேற்றிரவு மூழ்கி மூவர் காணாமற் போயிருந்த நிலையில் 17 வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கரை ஒதுங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவர் நேற்றிரவு நீரில் மூழ்கி காணாமற் போயிருந்தனர்.
தற்போது ஒரு சிறுவனின் சடலம் மாத்திரம் கரையொதுங்கியுள்ள நிலையில் கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஹிக்கடுவையில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
57 வயதான இந்தியர் என அடையாளம் காணப்பட்ட நபர், பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.