
அவிசாவளையில் காரொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு
அவிசாவளை- அமிதிரிகல பகுதியில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
விபத்தின் போது காரில் நால்வர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
