யுரேனியம் கொள்வனவு செய்ய முயன்ற சீனர்கள் மூவர் ஜோர்ஜியாவில் கைது

யுரேனியம் கொள்வனவு செய்ய முயன்ற சீனர்கள் மூவர் ஜோர்ஜியாவில் கைது

சட்ட விரோதமான முறையில் சுமார் இரண்டு கிலோ (4.4 இறாத்தல்) யுரேனியத்தை கொள்வனவு செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று சீனப் பிரஜைகள் ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலிசியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை அரச பாதுகாப்பு சேவைகள் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

சட்ட விரோதமாகக் கொள்வனவு செய்யப்படும் அணுசக்தி பொருட்களை ரஷ்யா வழியாக சீனாவுக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்தமை ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்றும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அரச பாதுகாப்பு சேவைப் பிரிவு அதிகாரியொருவர் குறிப்பிடுகையில், விசா விதிமுறைகளை மீறி ஜோர்ஜியாவில் ஏற்கனவே தங்கியிருந்த சீன பிரஜையொருவர், நாடு முழுவதும் யுரேனியத்தைத் தேடுவதற்காக நிபுணர்களை அழைத்து வந்ததாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த கதிரியக்கப் பொருளுக்கு நான்கு இலட்சம் டொலர் செலுத்த குழுவின் உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர் என்றுள்ளார்.

இச்சட்டவிரோத பரிவர்த்தனையின் விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் ​போது குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். இவர்கள் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிபக்கக்கூடிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அரச பாதுகாப்பு சேவை குறிப்பிட்டுள்ளது.

 

Share This