
சீரற்ற வானிலையால் காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் சிரமம்
சீரற்ற வானிலையால் காசா பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் பலஸ்தீனியர்கள் மேலும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் குண்டுவீச்சு, முற்றுகை மற்றும் மனித இழப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது சீரற்ற வானிலை புதிய சவாலாக மாறியுள்ளது.
பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவி விநியோகங்களை இஸ்ரேல் தடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், பாதுகாப்பான வீடுகள் இன்றி கூடாரங்களில் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
CATEGORIES உலகம்
