
பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வெள்ளத் தடுப்புகள் தரம் குறைவானவை – ஆய்வில் தகவல்
பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வெள்ளத் தடுப்புகள் தரம் குறைவாக இருப்பது புதிய பகுப்பாய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
பிரித்தானியா முழுவதும் வீடுகள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட பல வெள்ளத் தடுப்புகள் சரியான நிலையில் இல்லையென கண்டறியப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நிறுவனம் ஆய்வு செய்த 98,000 வெள்ளத் தடுப்புகளில் சுமார் 9 வீதமானவை தரம் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிப்பு, சேதம், அதிகமாக வளர்ந்த தாவரங்கள் போன்ற காரணங்களால் பல தடுப்புகள் செயல்திறனை இழந்துள்ளதாக
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, புயல் பிராமால் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழையும் காரணமாக யார்க், மான்செஸ்டர், டெவோன், கார்ன்வால் போன்ற இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் அரசாங்கம், நாட்டின் வெள்ளத் தடுப்பு அமைப்புகளை மேம்படுத்த 2036 ஆம் ஆண்டு வரை £10.5 பில்லியன் பவுண்ட் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதேவேளை அவசர பராமரிப்புக்காக £108 பவுண்ட் மில்லியன் உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
