“இப்படிப்பட்டவர்தான் கணவராக வரவேண்டும்” – ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது முன்னணி நடிகையாக இருக்கின்றார். இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன.
இந்நிலையில் தனக்கு வரப்போகும் கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
“ஒரு உறவில் அக்கறை, அன்பு, நல்ல இதயம், வெளிப்படைத்தன்மை, உண்மை போன்றவை இருக்க வேண்டும். இது என்னிடம் இயல்பிலேயே இருக்கிறது.என்னைப் போன்று இதே குணங்களைக் கொண்ட ஒருவரை் தான் என் கணவராக வர வேண்டும் என விரும்புகிறேன். எனது ஏற்றத் தாழ்வுகள் அனைத்திலும் உடன் இருக்க வேண்டும். நேர்மை மற்றும் கவனத்துடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும்.
பொறுப்பு இருந்தால்தான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க முடியும். யாரும் நம்முடன் இல்லாவிட்டால் இந்த வாழ்க்கையை வாழ்ந்து பயன் என்ன?” எனக் கூறியுள்ளார்.