டிக்டொக் காதலியின் வீட்டுக்கு வந்த திருமலை இளைஞன் கைது!

டிக்டொக் காதலியின் வீட்டுக்கு வந்த திருமலை இளைஞன் கைது!

நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவி தந்தையை இழந்தவர் எனவும், அவரின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், சித்தப்பாவின் பராமரிப்பிலேயே இருந்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவியின் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞனின் நடத்தை தொடர்பில் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், இளைஞரிடம் விசாரித்துள்ளனர். அவரிடம் அடையாள அட்டை இருக்கவில்லை. தகவல் வழங்கலிலும் தடுமாற்றம் இருந்துள்ளது. அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட, அவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை இன்று (24.01.2025) நுவரெலியா நீதிமன்றத்தில் முற்படுத்தத நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Share This