போலி நபர்களை இந்த ராசியினர் இலகுவாக கண்டுபிடித்து விடுவார்கள்

போலி நபர்களை இந்த ராசியினர் இலகுவாக கண்டுபிடித்து விடுவார்கள்

தற்போதைய காலகட்டத்தில் உண்மையான முகத்துடன் இருப்பவர்கள் யார்? போலி முகத்திரையை அணிந்துகொண்டு நாடகமாடுபவர்கள் யார்? என்று கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது.

அந்த வகையில், ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசியினர் போலியான நபர்களை கண்டறிவதில் கில்லாடிகள்.

அந்த வகையில் எந்தெந்த ராசியினர் போலி நபர்களை கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் என்று பார்ப்போம்.

துலாம்

சமநிலையான பார்வைக்கும் கூர்மையான பகுத்தறிவுக்கும் பெயர் பெற்றவர்கள் துலாம் ராசியினர். இவர்கள் சமூகம் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களால் எளிதாக போலி நபர்களை அடையாளம் காண இயலும். மற்றவர்களின் குணம் மற்றும் ஏமாற்றும் தன்மையை உடனடியாக கண்டறிவார்கள்.

விருச்சிகம்

இவர்கள் மற்றவர் மனதைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள். இவர்களை யாராலும் ஏமாற்ற இயலாது. இவர்கள் மற்றவர்களை எளிதாக ஈர்த்து விடுவார்கள். ஆனால், அவர்களின் வட்டத்துக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.

தனுசு

நேர்மையின்மையைக் கண்டறியும் திறன் இவர்களிடம் அதிகம். எப்போதும் உண்மையான உறவுகளைத் தேடுவார்கள். இவர்களின் தத்துவ புத்திக்கூர்மை மற்றும் ஞானம் ஆகியவை மனித நோக்கங்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

மீனம்

இவர்கள் தங்கள் உலகத்தை ஆழமாகப் புரிந்துகொள்வார்கள். மற்றவர்களின் நோக்கங்களைப் புரிந்துகொள்வார்கள். இதனால் போலி நபர்களை இலகுவாக கண்டுபிடிக்க முடியும்.

Share This