இந்த ராசியினர் திருமணம் செய்யக் கூடாதாம்

இந்த ராசியினர் திருமணம் செய்யக் கூடாதாம்

திருமணம் என்று வரும்போது அதில் ராசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காரணம் ராசிகள் நமது குணநலன்களில் அதிக தாக்கம் செலுத்துகின்றன.

அதன்படி எந்தெந்த ராசியினர் எந்தெந்த ராசியினரை திருமணம் செய்துகொள்ளக் கூடாது எனப் பார்ப்போம்.

மேஷம் – ரிஷபம்

மேஷ ராசியினரைப் பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் தன்னிச்சையானவர்கள் மற்றும் வாழ்க்கையை வேகமாக வாழ விரும்புவார்கள். அதேபோல் ரிஷப ராசியினர் ஆறுதல் மண்டலத்துக்குள்ளேயே வாழ விரும்புவார்கள். ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை நன்றாக இருந்தாலும் போகப்போக அவர்களுக்குள் காதல் குறைந்து வாழ்க்கை நரகமாகிவிடும்.

மிதுனம் – மீனம்

மீன ராசியினர் காதல் உணர்திறன் அதிகம் கொண்டவர்கள். ஆனால் மிதுன ராசியினர் காதலில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இதனால் இருவரில் ஒருவர் கடுமையான மனக் கஷ்டத்துக்கு ஆளாக வேண்டி வரும்.

கடகம் – தனுசு

கடக ராசியினர் காதலுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், தனுசு ராசியினர் மிகவம் சுதந்திரமானவர்கள். இதனால் எதிர்காலத்தில் தனுசு ராசிக்காரர்கள் அந்த உறவிலிருந்து வெளியேற நினைப்பார்கள்.

சிம்மம் – விருச்சிகம்

இருவருக்கும் ஒரே விதமான ஆளுமை இருப்பதால் இவர்களின் உறவு சிக்கலாக இருக்கும்.

கன்னி – மகரம்

இவர்கள் இருவரதும் ஆரம்பக்கட்ட வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் உறவு நரகமாக மாறிவிடும்.

துலாம் – கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் ஆழமாக காதலித்தாலும் அவர்களின் தனித்துவத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இதனால் இவர்களது வாழ்வில் பல சிக்கல்கள் எழும்.

Share This