இந்த உணவுகளுக்கு காலாவதி திகதியே கிடையாதாம்…
பொதுவாக உணவுப் பொருட்களை வாங்கும்போது நாம் முதலில் கவனிப்பது அதன் காலாவதி திகதியைத் தான்.
ஆனால், சில உணவுப் பொருட்களுக்கு இயற்கையாகவே காலாவதி திகதி கிடையாது. அவை ஏன் கெட்டுப் போவதில்லை எனப் பார்ப்போம்.
உப்பு – சோடியம் குளோரைட் எனப்படும் கனிமத்தின் ஒரு வடிவமான உப்பு உணவுகளைப் பதப்படுத்தவும் பாதுகாக்கவும் பயன்படுகிறது. ஈரப்பதத்தை உறிஞ்சி, பக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. இதன் காரணமாக உப்பு காலாவதியாவதில்லை.
சோயா சோஸ் – சோயா பீன்ஸ், உப்பு, கோதுமையிவிருந்து தயாரிக்கப்படும் இந்த சோஸ் அதிகளவு சோடியத்தைக் கொண்டது. இந்த சோயா சோஸை திறந்த பின்னரும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அதன் தரம் அதிக காலம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
தேன் – தேன் குறைந்த ஈரப்பதம் மற்றும் அதிக அமிலத்தன்மைக் கொண்டது. இது பக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதனை முறையாக சேமித்து வைக்கும்பட்சத்தில் நீண்ட காலத்துக்கு கெட்டுப் போகாது.
வினிகர் – அசிட்டிக் அமிலத்தைக் கொண்டுள்ள வினிகர் ஒரு புளித்த திரவமாகும். இதில் உள்ள பக்டீரியா, ஏனைய நுண்ணுயிரிகளைக் கொல்கிறது. இதனால் வினிகர் காலாவதியாகாது.
சீனி – சர்க்கரை, சீனிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சீனி குறைந்த ஈரப்பதத்தைக் கொண்டுள்ளது. இதனை காற்றுப்புகாத பெட்டியில் சேமித்து வைத்தால் நீண்ட காலம் உபயோகிக்கலாம்.