
மரியாதையுடன் நடத்தப்பட்டால் உக்ரேனுக்குப் பிறகு எந்தப் போரும் இருக்காது
மரியாதையுடன் நடத்தப்பட்டால் உக்ரேனுக்குப் பிறகு எந்தப் போரும் இருக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா தாக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படும் தகவல் அர்த்தமற்றது என மொஸ்கோவில் நேற்று நடைபெற்ற ஆண்டிறுதிச் செய்தியாளர் மாநாட்டில் புடின் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐரோப்பாவுடன் போர் புரிய ரஷ்யா திட்டமிடவில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் விரும்பினால், ‘இப்போதே தயார்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
