நாட்டில் உப்பு தட்டுப்பாடு இல்லை – உற்பத்தி தடை மாத்திரமே!

நாட்டில் உப்பு தட்டுப்பாடு இல்லை – உற்பத்தி தடை மாத்திரமே!

நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்பதால் உப்பு கையிருப்புக்கான அவசியம் இல்லை என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.

உப்பு உற்பத்திக்கு 45 நாட்களுக்கு வறண்ட வானிலை இருக்க வேண்டும் என்றும், எனினும் சமீபத்தில் பெய்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக உப்பு உற்பத்தி தடைபட்டதாகவும், அதனால் உப்பு விளைச்சல் குறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மார்ச் மாதம் வரை அது போதுமானதாக இருக்காது என்பதால், உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டால் உப்பை இறக்குமதி செய்வதற்கு கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி உப்பு உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், தொழிற்சாலைகளுக்குத் தேவையான உப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டால், 30,000 மெட்ரிக் டொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share This