நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், லாஃப்ஸ் கேஸ் அதன் விநியோகத்தை தாமதப்படுத்துவதால் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

லாஃப்ஸ் கேஸ் விநியோகம் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், மக்கள் லிட்ரோ கேஸுக்கு மாற முடிவெடுத்துள்ளதாகவும், இது லிட்ரோ கேஸுக்கும் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க, லிட்ரோ கேஸ் விநியோகம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளாந்த விநியோகம் 1,200 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,500 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களிடம் போதுமான எரிவாயு இருப்பு உள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அடுத்த செவ்வாய்க்கிழமை இரண்டு எரிவாயு கப்பல்கள் வரவுள்ளன.

எதிர்வரும் 25ஆம் திகதி லாஃப்ஸ் கேஸ் விநியோகம் செய்யப்படவுள்ளன. லாஃப்ஸ் கேஸ் நுகர்வோரை ஏமாற்றாமல் தொடர்ச்சியான விநியோகத்தை பராமரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )