உலகின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலை சுரங்கப்பாதை சீனாவில் திறந்து வைப்பு!

உலகின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலை சுரங்கப்பாதை சீனாவில் திறந்து வைப்பு!

உலகின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான தியான்ஷான்-ஷாங்லி சுரங்கப்பாதை டிசம்பர் 27 அன்று போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

22.13 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை சீனாவின் ஜின்ஜியாங் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்தத் திட்டம் உலகின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலை சுரங்கப்பாதை மற்றும் அதிவேக நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் உலகின் ஆழமான செங்குத்து வீழ்ச்சிக்கான இரண்டு உலக சாதனைகளைப் படைத்துள்ளது என்று சீனா கம்யூனிகேஷன்ஸ் கட்டுமானத்தின் தலைவர் சாங் ஹைலியாங் தெரிவித்துள்ளார்.

சுரங்கப்பாதையின் ஒரு பகுதியாக இருக்கும் உரும்கி-யூலி எக்ஸ்பிரஸ்வே, ஐந்து வருட கட்டுமானத்திற்குப் பின்னர் டிசம்பர் 27 அன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

தியான்ஷான் மலைகள் வழியாகச் செல்லும் 324.7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த அதிவேக நெடுஞ்சாலை, மலைகளுக்கு வடக்கே உள்ள தலைநகரான உரும்கிக்கும், மலைகளுக்கு தெற்கே உள்ள கோர்லா நகருக்கும் இடையிலான பயண நேரத்தை ஏழு மணி நேரத்திலிருந்து 3.5 மணி நேரமாகக் குறைத்துள்ளது.

சின்ஜியாங்கின் வடக்கு மற்றும் தெற்கே இணைக்கும் இந்த அதிவேக நெடுஞ்சாலை, சீனாவின் பிற பகுதிகளுக்குச் செல்லும் பல முக்கிய எக்ஸ்பிரஸ்வேகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிவேக நெடுஞ்சாலை, பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சிக்கும், பிராந்திய மேம்பாடு மற்றும் கிராமப்புற மறுமலர்ச்சித் திட்டங்களுக்கும் பெரிதும் பங்களிக்கும் என்று சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2025 ஆம் ஆண்டின் இறுதியில், ஜின்ஜியாங்கில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை 237,000 கி.மீ.யை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )