இன்னொரு போரை உலகம் தாங்கிக் கொள்ளாது – துருக்கிய ஜனாதிபதி

இன்னொரு போரை உலகம் தாங்கிக் கொள்ளாது – துருக்கிய ஜனாதிபதி

உலகம் இன்னொரு போரை தாங்கிக்கொள்ள முடியாது என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளர். இந்தப் பிராந்தியத்தில் மோதலை தான் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு துருக்கி ஆயுதங்களை வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் எர்டோகன் மறுத்தார்.

அங்காராவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்ன பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு மாறுவதற்கு முன்பு தணிக்கப்பட வேண்டும்.

இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு இராணுவ ஆதரவு வழங்குவதாக வெளியான செய்திகளை அவர் மறுத்தார்.

துருக்கிய விமானப்படை 7 C-130 ஹெர்குலஸ் விமானங்களை பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த விமானங்களில் ஆறு விமானங்கள் கராச்சியிலும், ஒரு விமானம் இஸ்லாமாபாத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்தன.

ஆனால் துருக்கி இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்தது.

இதற்கிடையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை சுட்டிக்காட்டி பாகிஸ்தானை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கடுமையாக சாடியது.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐ.நா.வின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வலையமைப்பை உருவாக்குவதற்கான கூட்டத்தில் இந்தியா இந்த விமர்சனத்தை எழுப்பியது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து ஊக்குவிக்கும் நாடு என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் தெரிவித்தார்.

 

Share This