மகிந்தவுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் முழு உலகமும் சிரிக்கின்றது – திலீப் வெதஆராச்சி

மகிந்தவுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் முழு உலகமும் சிரிக்கின்றது – திலீப் வெதஆராச்சி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பார்த்து முழு உலகமும் சிரிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரசாங்க இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று வெளியேறிருந்தார்.

இதன்போது அரசியல் பிரபலங்கள், இராஜதந்திரிகள் என பலரும் அவரை நேரில் சென்று சந்தித்திருந்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியும் மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்திருந்தார்.

இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு விளையாட்டை விளையாடுவோம்.

மகிந்த ராஜபக்ச இந்த நாட்டை போரில் இருந்து மீட்டவர். எங்கள் கிராமத்தை சேர்ந்தவர். அவருக்கு இன்று இழைக்கப்பட்ட அநீதியை பார்த்து முழு உலகமும் சிரிக்கிறது.

நாட்டில் 30 ஆண்டு காலம் நீடித்த போரை முடிவுக்கு கொண்டுவந்த மாபெரும் தலைவர் மகிந்த ராஜபக்ச. அவரின் இந்த நடவடிக்கை காரணமாகவே மக்கள் இன்று வீதிகளில் நடக்க முடிகின்றது.

அப்படியான ஒரு நபரை இந்த அரசாங்கம் வெளியே தள்ளியுள்ளது. அவர் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர். இந்த இடத்தில் அரசியல் அவசியம் இல்லாத ஒன்று” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Share This