நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன உரிமங்கள் இரத்து செய்யப்பட வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன உரிமங்கள் இரத்து செய்யப்பட வேண்டும்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன உரிமங்கள் அல்லது அரசாங்க வாகனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அரசாங்கம் ஏற்கனவே வாகன உரிமங்கள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது, எனினும் அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.

ஆனால் புதிய நாடாளுமன்ற முன்மொழிவின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் போக்குவரத்தை தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழு ஒன்று இந்த முன்மொழிவை தனிநபர் உறுப்பினர் பிரேரணையாக முன்வைக்க உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான பிரேரணையும் நேற்று (07) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This