தனது நாட்டு விமானத்தையே தவறுதலாக சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா
செங்கடலில் அமெரிக்க இராணுவம் தனது சொந்த விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. கடற்படையின் F/A 18 ரக விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை உளவு பார்க்கும் போது விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்த இரு விமானிகளும் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடற்படையின் மற்றொரு விமானம் F/A 18ஐ ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க மத்தியக் கட்டளை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
செங்கடல் ஒரு வருடத்திற்கும் மேலாக இராணுவ நடவடிக்கைகளின் மையமாக உள்ளது. இப்பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூதிகள் தாக்குதல் வரும் நிலையில், அமெரிக்க இராணுவம் இங்கு முகாமிட்டுள்ளது.
ஹூதி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஏமனில் உள்ள ஹூதி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் மத்திய நகரான தவிவ் நகரில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்தது.
செங்கடல் மீது பல ஹூதி ஆளில்லா விமானங்களையும் ஒரு கப்பல் ஏவுகணையையும் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. டெல் அவிவ் மீது ஹூதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் காயமடைந்தனர்.