கோட்டாவை கவிழ்க்க அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரே காரணம்

கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில் காரணமாக அமைந்தது அந்த அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர்தான் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“அப்போது 2022 அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணம் என்ன? அந்த நேரத்தில் அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர், நாட்டில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே எரிபொருள் இருக்கும் என்று கூறினார்.
பின்னர் மக்கள் பீப்பாய்களாக எரிபொருளை பெற்றுக்கொண்டனர்.
கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில் காரணமாக அமைந்தது செய்தது அரசாங்கத்தின் சொந்த அமைச்சர்தான்.”
இன்றும் அதேதான் நடக்கிறது. இப்போது அவர்கள் குரங்குகளை எண்ணும் விளையாட்டை விளையாட முயற்சிக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.