பரேட் சட்டத்தின் இடைநிறுத்தம் நீட்டிப்பு – நலின்த ஜயதிஸ்ஸ
பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை இன்று வழங்கியது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் நலின்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
மேலும், பரேட் சட்டத்தை அமல்படுத்துவது 2025 மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இலங்கை மத்திய வங்கியால் அரச மற்றும் தனியார் வங்கி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும் வினைத்திறனான பங்களிப்பின் மூலம் குறித்த பிரச்சினையை தவிர்ப்பதற்கு பன்முக பொறிமுறையை உருவாக்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டு காலத்தில் இலங்கை முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடிகள், சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முயற்சி பிரிவுக்கு கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன்,
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் வங்கிகளிலிருந்து பெற்ற கடன்களை தவிர்க்கும் போது நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக தெரியவருகிறது.
அந்த நிலையில், கடனை செலுத்த முடியாமை காரணமாக கணிசமானளவு வர்த்தகர்களின் ஆதனங்கள் வங்கிகளால் உரித்து பெறப்பட்டு ஏலவிற்பனை செய்யும் சூழல் உருவாகியிருப்பதன் காரணமாக
1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தில் திருத்தம் செய்து அதன்மூலம் ஆதனங்களை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்தல் 2024.12.15 திகதி வரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
பராட்டே சட்ட கைவிடுதலை தொடர்ந்தும் நீடிக்குமாறு சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முயற்சி பிரிவுடன் தொடர்புடைய சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
ஆதனங்களை ஏலவிற்பனை செய்வதற்கு இடமளிப்பதற்கு அவ்வாறு கடன்களை மீள செலுத்துவதற்கான செயற்பாட்டுத்
திட்டத்தை அறிமுகம் செய்வதன் மூலம் இருதரப்புக்கும் நியாயமான தீர்வு கிடைப்பதற்குத் தேவையான சூழமைவை உருவாக்குதல் மிகவும் பொருத்தமானது என அரசால் அவதானிக்கப்பட்டுள்ளது.