சபாநாயகர் பதவி சுயாதீனமானது – சம்பளம் ஏன் கட்சி பொது நிதியில் சேர்க்கப்படுகிறது?
![சபாநாயகர் பதவி சுயாதீனமானது – சம்பளம் ஏன் கட்சி பொது நிதியில் சேர்க்கப்படுகிறது? சபாநாயகர் பதவி சுயாதீனமானது – சம்பளம் ஏன் கட்சி பொது நிதியில் சேர்க்கப்படுகிறது?](https://oruvan.com/wp-content/uploads/2025/02/12-796x445-1.jpg)
தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் கட்சியின் பொது நிதிக்கு சேர்க்கப்படும் என அக்கட்சி கூறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அதன்படி, சபாநாயகர் ஜகத் விக்கிரமசிங்கவும் தனது சம்பளத்தை தேசிய மக்கள் சக்தியின் பொது நிதிக்கு வழங்குவதாக தெரிவித்த தயாசிறி ஜயசேகர, சபாநாயகர் என்பவர் அனைவருக்கும் சுயாதீனமான ஒருவர் எனவும் அவ்வாறு சுயாதீனமானவர் எனவும் அத்தகைய சுயாதீன பதவியை வகிக்கும் ஒருவரின் சம்பளம் கட்சியின் பொது நிதியில் எவ்வாறு சேர்க்கப்படும் என கேள்வியெழுப்பினார்.
சபாநாயகர் பதவி சுயாதீனமானது எனவும் அத்தகைய சுயாதீன பதவியை வகிக்கும் ஒருவரின் சம்பளம் கட்சியின் பொது நிதியில் சேர்க்கப்படும் போது குறித்த சுயாதீன பதவிக்கு என்ன நடக்கும் எனவும் அவர் வினவினார்.
சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தவில்லை எனவும் அவர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது எனவும் அவர் கூறினார்.