கருந்துளைக்குள் இருக்கும் ஒருமைத்தன்மை….சிறிய ஒளி கூட தப்ப முடியாது

உலகின் விசித்திரமான விடயங்களில் கருந்துளைகளும் ஒன்று. பொதுவாக கருந்துளைகள் குறித்து பேசும்போது ஒருமைத்தன்மை எனும் வார்த்தையை அடிக்கடி கேட்போம்.
இந்த ஒருமைத் தன்மை என்பது கருந்துளையின் நடுவில் இருக்கும் ஒரு புள்ளி. கருந்துளையின் முழு எடையும் இந்த மிகச் சிறிய இடத்துக்குள் சுருங்கியிருக்கும்.
இந்த ஒருமைத்தன்மை கருந்துளையின் ஈர்ப்பு விசையை கட்டுக்குள் வைக்கிறது.
சிறிய வெளிச்சம் கூட இக் கருந்துளையின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்ப இயலாது அந்த அளவுக்கு மிகவும் வலிமையானது.
எனவே கருந்துளைக்குள் இருக்கும் ஒருமைத்தன்மை பற்றி முழுமையாக அறிந்துகொண்டால் மட்டுமே பிரபஞ்சத்தின் பல புதிர்களை அவிழ்க்க முடியும்.