ரியோவின் ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது

ரியோவின் ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஸ்வீட் ஹார்ட்.

இப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, பௌசி ஆகியோர் நடித்துள்ளனர்.

திரைப்படம் அடுத்த மாதம் 14 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை அண்மையில் படக்குழு வெளியிட்டது.

தொடர்ந்து இரண்டாம் பாடலான கதவை திறந்தாயே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப் பாடலை மதன் கார்க்கியின் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சிந்துரி விஷால் இணைந்து பாடியுள்ளனர்.

Share This