ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் இந்த வாரம் வெளியாகும்

ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் இந்த வாரம் வெளியாகும்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இலங்கையில் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கான மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பரீட்சைகளில் ஒன்றாகும்.

கடந்த மாதம் இடம்பெற்ற இந்தப் பரீட்சையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்நிலையில், பரீட்சை முடிவுகள் இந்த வாரம் வெளியிப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுகள் வெளியிடப்பட்டதும், தேர்வுகள் திணைக்களத்தின் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் முடிவுகளை ஆன்லைனில் அணுக முடிவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.doenets.lk

www.results.exams.gov.lk

மாணவர்கள் தங்கள் சுட்டிலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் தங்கள் முடிவுகளைச் சரிபார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This