கோட்டாபய காலத்தில் இரத்து செய்யப்பட்ட திட்டம் மீண்டும் அமுல்
2020 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்பு நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2016 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2019 டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பான ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.