
தங்கத்தின் விலை 20,000 ரூபாவால் குறைவு
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை ரூ.20,000 குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, நேற்றைய தினம் 420,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் 400,000 ரூபாவாகக் குறைந்துள்ளது.
இதனிடையே, இன்று (30) காலை கொழும்பு செட்டி தெரு தங்க சந்தை நிலவரப்படி, ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 368,000 ரூபாவாாகக் குறைந்துள்ளது.
நேற்றைய தினம் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 386,400 ரூபாவாகக் காணப்பட்டது.
