அறுகம்பேவில் தாக்குதல் நடத்தும் திட்டம் – சிறைச்சாலையிலேயே தீட்டப்பட்டுள்ளது

அறுகம்பேவில் தாக்குதல் நடத்தும் திட்டம் – சிறைச்சாலையிலேயே தீட்டப்பட்டுள்ளது

அறுகம்பேவில் தாக்கல் நடத்த சிறைச்சாலையிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பயங்கரவாத விசாரணை பிரிவு, இந்த விடயத்தை தெரிவிதுள்ளது.

விடுதலை புலிகள் அமைச்சில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி  சிறையில் இருக்கும் முன்னாள் போராளி ஒருவரின் ஊடாக இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணை பிரிவு கூறியுள்ளது.

அறுகம்பே விவகாரத்துடன் தொடர்புடைய 7 பேர் கைதுசெய்யப்பட்டு 90 தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share This