
அரைநூற்றாண்டாக குடிநீருக்காக போராடும் கொட்டகலை டிரேட்டன் தோட்ட மக்கள்
கொட்டகலை டிரேட்டன் கே.ஓ. பிரிவு தோட்ட மக்கள் சுமார் 50 ஆண்டுகளாக குடிநீருக்காக போராடுவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
டிரேட்டன் கே.ஓ. பிரிவு தோட்டத்தில் சுமார் 24 குடியிருப்புக்களில் 250 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக குடிநீருக்காக போராடி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக அரசியல் வாதிகளால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என இந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வறட்சியான காலங்களில் இந்த பிரச்சினை மேலும் மோசமடைவதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான தண்ணீரைகூட பெற முடியாத நிலை உள்ளதால் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பெரிதும் பாதிப்பு உள்ளாகுவதாகவுதம், தண்ணீரை தேடி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.
அவ்வாறு செல்லும் இடங்களில் தண்ணீரை பெற்றுக்கொள்ள பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்ற போதிலும் இன்னும் தமக்கு தீர்வு கிடைக்கல எனக் கவலை வெளியிடும் இந்த மக்கள், தமது குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.


