வெளிச்சத்தைக் கண்ட படலந்த ஆணைக்குழு அறிக்கை

வெளிச்சத்தைக் கண்ட படலந்த ஆணைக்குழு அறிக்கை

படலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இன்று (14) நாடாளுமன்றத்தில் சபைமுதல்வர் பிமல் ரத்நாயக்க படலந்த ஆணைக்குழு அறிக்கையை முன்வைத்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஒரு இருண்ட அறையில் அடைக்கப்பட்டிருந்த படலந்த இன்று சூரிய வெளிச்சத்தைக் கண்டது எனக் கூறி படலந்த ஆணைக்குழு அறிக்கையை சமர்பித்து சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உரையாற்றினார்.

இந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும், ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பாக மேலும் முடிவுகளை எடுக்க ஜனாதிபதி குழுவை நியமித்து இரண்டு நாள் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் சபை முதல்வர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This