ஒகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது

ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து மாத்திரம் 19,572 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஒகஸ்ட் மாதத்தில் பிரித்தானியாவிலிருந்து 10,970 பேரும், இத்தாலியிலிருந்து 7,641 பேரும் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
அத்துடன் பிரான்சிலிருந்து 6,870 சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 6,762 பேரும் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,467,694 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 268,694 பேர் இந்தியாவிலிருந்தும், 142,347 பேர் பிரித்தானியாவிலிருந்தும், 117,322 பேர் ரஷ்யாவிலிருந்தும் வருகைத்தந்துள்ளதாக
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.